Surya Mudra (Mudra of Sun):
Method:
Bend the ring finger and press it with thumb.
Specialty:
It sharpens the center in thyroid gland.
Time Duration:
Practice it daily twice for 5 to 15 minutes.
Benefits:
• It reduces cholesterol in body and helps in reducing weight
• It reduces anxiety
• It corrects indigestion problems
Saturday, November 28, 2009
Friday, November 27, 2009
பூப்பெய்திய பெண்களுக்கு

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.
மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.
சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.
அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.
பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.
Thursday, November 26, 2009
'பல் போனால் சொல் போகும்'

'பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன்.
''குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.
குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.
பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.
சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.
என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.
பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''
Wednesday, November 25, 2009
Banned by FDA in U.S

Don't eat Kurkure
because it contains high amount of plastic if U don't believe burn Kurkure n U can see plastic melting. Please forward to all!!!!!!!!!!! Inform all whom you think requires this message as they eat Kurkure.
News report from Times of India Avoid these tablets they are very dangerous
§ D Cold
§ Vicks Action- 500
§ Actifed
§ Coldarin
§ Cosome
§ Nice
§ Nimulid
§ Cetrizet-D
They contain Phenyl- Propanol -Amide PPA.Which causes strokes, and these tablets are banned by FDA in U.S..
Cotton Ear Buds... (Must read it)
Cotton Ear Buds... (Must read it)
Please do not show sympathy to people selling buds on roadside or at signals.....Just wanted to warn you people not to buy those packs of ear buds you get at the roadside. It's made from cotton that has already been used in hospitals. They take all the dirty, blood and pus filled cotton, wash it, bleach it and use it to make ear buds. So, unless you want to become the first person in the world to get Herpes Zoster Oticus (a viral infection of the inner, middle, and external ear) of the ear and that too from a cotton bud, DON'T BUY THEM!
Please forward to all. This may be helpful for someone............
Tuesday, November 17, 2009
Doctor Fees 5 rupees

புனிதமாகப் போற்றப்படும் மருத்துவத்துறை வணிகமயமாகி வரும் இந்தக் காலத்தில் சேவை நோக்கத்தோடு செயல்படும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஓய்வுபெற்ற அரசு மருத்துவ அதிகாரி ஜி.புஷ்பவனம்.சாதாரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்றாலே "கணினி பில்' போட்டு பணம் கறக்கும் இந்த ஹைடெக் "மெடி' யுகத்தில், வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார் இவர்.தற்போது 63 வயதாகும் புஷ்பவனம்,மதுரை மாவட்டம், சோழவந்தானில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.எப்படி இந்த 5 ரூபாய் சிகிச்சை? ""மருத்துவம் என்பது நோயாளியின் நோயைத் தீர்க்கும் பணியாக இருக்க வேண்டுமே ஒழிய, பணத்தைப் பறிக்கும் ஒரு கருவியாக இருக்கக்கூடாது என்பது என் எண்ணம்.எப்பொருளும் விலையின்றி கொடுத்தால் மதிப்பிருக்காது. அதனால்தான், குறைந்த கட்டணமாவது வாங்கி இச் சேவையை அளித்து வருகிறேன்.28 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் இச் சேவையைச் செய்து வருகிறேன். தொடக்கத்தில் ரூ.3 கட்டணம்தான் வசூலித்தேன். தற்போது ரூ.5 வசூலிக்கிறேன்.இக்குறைந்த கட்டணத்தில் சிசிச்சை அளிப்பதற்கு போதும் என்ற மனநிறைவுதான் காரணம்.நான் வசித்த பகுதிகள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணி கொண்டதால், மருத்துவத்துக்கு பல ஆயிரம் பணம் செலவழிக்கும் நிலையில் பெரும்பாலானோரும் இல்லை என்பதை நன்கறிவேன்.இதனால், புற்றுநோயாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தொழுநோயாளிகள், காசநோயாளிகள் என்றால் கட்டணம் வாங்குவதில்லை.இதுதவிர, அவசர நேரத்தில் தொலைபேசி மூலமும் தெரிந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பேன்'' என்று கூறும் புஷ்பவனம், தொழுநோயாளிகள், காசநோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி பரிந்துரையும் செய்கிறாராம்.500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டுள்ளதாக கூறும் இவர், இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்புவதாக தெரிவிக்கிறார்.நன்றி தினமணிக்கதிர்.
Saturday, November 14, 2009
உண்மையாகவே மருந்துதானா?
நாம் நோய் நீங்க அருந்துவது உண்மையிலேயே மருந்துதானா?
இத கொஞ்சம் படிச்சு பாருங்க :அன்புடன் உங்கள் மருத்துவர் சுந்தர்
மருந்து :
" ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள், நமது உடலில் அசெளகரியம் ஏற்படுத்தும் வியாதியினை ,நமது உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியின் துணைகொண்டு எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது குணப்படுத்தி இயற்கையான ஆரோக்கியத்தினை எது நிலைநிறுத்துகின்றதோ அதுவே மருந்து எனப்படும் "
* எவை மருத்துவர்களால் உங்களது இறுதிகாலம் வரை எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்ய படுகின்றதோ அவை உண்மையில் குணப்படுத்தும் மருந்துகள் அல்ல,நமது வியாதியினை நமக்கு தெரியாமல் மறைக்கும், பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள்!
* எவை உட்கொள்வதன் மூலம் நமது இயற்கை எதிர்ப்பு சக்தியினை குறைக்கின்றவோ! ,உணவுக்குடலில் எரிச்சல் மற்றும் எரிவு புண்களை ஏற்படுத்துகின்றனவோ!, இயற்கையான மலத்தினை இறுகச்செய்கின்றனவோ!, அவை உண்மையில் மருந்துகள் அல்ல ,நமது அறியாமையினால் நாம் விலை கொடுத்து நமக்கே வாங்கி அருந்தும் நஞ்சு என்பதனை உணர்ந்து கொள்வோம் !
* எவை தாங்க முடியாத வலிகளை , வியாதிகளை உட்கொண்ட 1 மணி நேரத்தினில் குணப்படுத்துவது போன்று மாய தோற்றத்தினை ஏற்படுத்தி அடுத்த 24 மணி நேரத்திற்கு கட்டுப்படுத்துகின்றதோ அவைகள் கொடிய விசவேதிப்பொருட்களால் தயாரிக்கப்பட்டவை என்பதனையும் அவைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் நமது ஈரல் ,கல்லீரல் மற்றும் உள்ளுறுப்புகள் செயலிழப்பிற்கு வழிவகுக்கும் என்பதனை அறிந்து நம்மை தற்காத்து கொள்வோம் !
* நாட்பட்ட வியாதிகளை நொடிப்பொழுதில் குணப்படுத்துவது ஆண்மீக துறையில் வேண்டுமானால் சாத்தியமாகலாம் ஆனால் மருத்துவ துறையில் இயற்கைக்கு முரணானது ,சாத்தியமற்றது !
* மருந்துகளை இனம்கண்டறிந்து கொடுப்பது மட்டுமே மருத்துவன் செயல் ஆனால் குணம் அளிப்பது, எல்லாம் வல்ல அனைவர்கும் பொதுவான பரம்பொருள் என்பதனை உணர்ந்து ,எவ்வகை மருந்துகள் அருந்தும் முன்னர் இறைசிந்தனையோடும் , மருத்துவர்பால் நம்பிக்கையோடும் உட்கொண்டால் வியத்தகு நன்மாற்றங்களை விரைவில் காணலாம்
ஸர்வே பவந்து சுகினஹ:
ஸர்வே ஸந்து நிராமயாஹா:

Subscribe to:
Posts (Atom)